எசுபிஎம் தமிழ்மொழி - இலக்கியம் ஆகிய பாடங்கள் தொடர்பாக நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியான சூழல் இன்று ஓர் உச்சத்தை அடைந்துள்ளது. இன்று (12.12.2009) காலை 10.00 மணி தொடங்கி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இந்தத் தமிழ் மீட்புப் பேரணி மிக கட்டுக்கோப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது. எசுபிஎம்12 பாட மீட்புக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தலைமையில் இந்த முடற்கட்ட தமிழ் எழுச்சிப் பேரணி வெற்றியுடன் நடைபெற்றுள்ளது.

இந்த எழுச்சியும் - தமிழ் மீட்பு உணர்வும் - தமிழ்க் காப்பு உணர்வும் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பது பலருடைய விருப்பமும் எண்ணமுமாக இருக்கிறது. எனவே, தமிழைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை மீட்கவும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும்.

இன்று "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" இல் நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, 12 டிசம்பர் 2009 தோட்ட மாளிகை
"தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம்" பேரணியின் தீர்மானங்கள்


1)மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது அம்சத்தை நிலை நிறுத்த வேண்டும்.

வரைவு எண்:152
அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.

வரைவு எண்:152(1)(a)
பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண்:152(1)(b)
கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.


2)தாய் மொழியான தமிழ்க் கல்வி சம்பந்தப்பட்ட கொள்கைகளை அமலாக்குவதற்கு முன் சமூக இயக்கங்களையும் கல்வியாளர்களையும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும்.


3)எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் எடுக்க அனுமதிக்கப்படும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

4)தமிழ் மொழியின் ஆய்விற்கும் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் அரசுசார் அமைப்பு ஒன்று அதிவிரைவில் முழு அரசாங்க நிதி உதவியோடு அமைக்கப்பட வேண்டும்.

5)நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் மொழிக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு தரப்பின் நடவடிக்கைகளையும் இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் வேண்டிய பொறுப்பு நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளால் நாம் வேறுபட்டிருக்கலாம். அது எல்லாவிடத்திலும் நிகழும் இயல்பான ஒன்றுதான். ஆனாலும் மொழி, இனம், சமயம், பண்பாடு என்று வருகின்றபோது, நாம் நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்தால்தான் வெற்றியை நாம் ஈட்ட முடியும் என்பதற்கு இன்று நடந்த "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" மற்றுமொரு நற்சான்று என்றால் மிகையில்லை.

நன்றி: திருத்தமிழ் சுப. நற்குணன்




2012...

இடுகையிட்டது குருமூர்த்தி 13 டிச., 2009 0 கருத்துகள்



வாழ்வின் வெம்மையிலிருந்து
விடுபட என் மனம்
கவிதையையே தாபிக்கிறது.

கவிதைகளுக்காக ஒன்றுமற்ற
மொட்டை வெளியில்
வார்த்தைகளை வேட்டையாடிக்
கொண்டிருக்கிறேன்.

என்னால் கடித்துக்குதறி
உமிழப்பட்ட வார்த்தைகளை
உங்களிடம் கவிதை என்கிறேன்
நீங்கள் அதை சிறிய குச்சியால்
கிளறி அதன் உள்நுட்பங்களை
பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கும் போது
 உலகம் அழிகிறது .  

மரணத்தை நோக்கியப்பாதை... 2

இடுகையிட்டது குருமூர்த்தி 9 டிச., 2009 0 கருத்துகள்




இன்னைக்கும் எங்க group ல பாசுக்கு மட்டுந்தான் அவனோட girlfrindஅ தெரியும் வேறு யாருக்கும் தெரியாது.அவனோட காதல் போன்ல மட்டுந்தான் வளர்ந்தது அவங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்து பேசுனதெல்லாம் ரொம்ப rare ஒரு நாளைக்கு கொறைச்சலா 20 மணி நேரம் பேசுவான்,எப்படித்தான் recharge பண்றான் என்னதான் பேசுவானே தெரியாது காலைல toiletல பேசுவான்,busல பேசுவான்,barல பேசுவான் எங்களுக்கெல்லாம் பயங்கர வெறுப்பாஇருக்கும் சொன்னாதான்கேட்க மாட்டானே,





குடும்பம்,நட்பு பற்றிலாம் கவலையேபடல,ரொம்ப தீவிரமா இருந்தான்

தீவிரம்னா காதல்னு சொல்லலாம் முடியாது எந்த உறவிலும் ஆரம்பத்துல அதிக ஈடுபாடு காட்டுவான் அடுத்த கொஞ்ச நாள்லவிட்டேத்தியா இருப்பான் அவனோட மனநிலைகேற்ற சூழ்நிலையும், மனிதர்களும் இல்லாத சூழ்நிலையில் ஓயாத பகடியின் மூலம் அவன் தனது வெறுப்பை வெளிபடுதிக்கொண்டே இருப்பான்.

இதுதான்அவனோட முதல்காதல்,இந்த காதல்ஒருவருடத்துக்கு மேல smoothஆ போய்ட்டு

இருந்திச்சி அதுக்கப்புறம் ஆரம்பிச்சிட்டான் நான் கல்யாணம் பண்ணபோறேன்னான்

எனக்கு இதுல சுத்தமா உடன்பாடே இல்ல,அந்த பொண்ணோட அப்பா foreinla ருந்து வறாரு

அவர் வந்ததும் நீங்கல்லாம் வாங்கடா போய் பேசலம்னான் எனக்கும் சும்மா போய் பேசி பாக்கலாம்னு ஒரு ஆசை இருந்தது,சரி போலாண்டா போன் பண்ணுடான்னு சொல்லிட்டு நானும் அத மறந்திட்டன்

திடிர்னு ஒரு நாள் போன் பண்ணான் மச்சான் எங்க இருக்கனான்

busstandலவெய்ட்பண்றேன் சீக்கிரம் வானான், வந்தாகைலகட்டுபோட்டுட்டு நிக்கிறான் என்னடா ஆச்சுன்னா மச்சான்நானும்,சுரேஷும் போய் பேசுனோம்டா வரப்ப

கார் accident ஆயிடுச்சினான் சரி என்னடா பேசுனிங்க" அதாமச்சான் 30 பவுன் நகையும்,ஒரு வீடும் தரேன்னு சொல்றானுக பின்னால சின்னதா ஒரு மினிமார்கெட் வச்சி தரதா சொல்றானுகடானான்

டேய் இதெல்லாம் வேலைக்கே ஆகாது அப்படி ஏதும் அவசரம்னா வா வேளாங்கண்ணி போயிட்டு

வந்துடலாம்னேன், டேய் மொக்க அது இல்லடா எங்கப்பன்ட பணம் கேட்டாலும் தர மாற்றான்,
என்னாலலாம் அடுத்தவன்ட உன்ன மாதிரி பண்ணையாளாட்டம்லாம் வேல செய்யமுடியாதுடா ஏதாவது பிசினஸ் பண்ணனும் ஒனக்கு ரெண்டு சாய்ஸ்  தரன்    ஒன்னு எனக்கு கல்யாணம் பண்ணிவை இல்ல பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுனுசொன்னான்,"சாமிசைக்கிள போறப்ப பூசாரிக்கு புல்லட்டா,என்னாலலாம் ஒன்னும் பண்ண முடியாதுன்னு"  சொல்லிட்டேன்,இந்த கல்யாணம் நடக்காதுன்னு உறுதியா நம்புனேன்,அதுக்கப்றம் அவனோட கூட்டாளி சுரேஷ் எதோ லவ் பிரச்சனைல தற்கொலை பண்ணிகிடடான்,



                                                            
 இதுல பாஸ்கர் வேற லவ்பண்ண ஆரம்பிச்சிட்டான் அவனோட class mateஅ 3 வருசமா  அவளுக்கு தெரியாமலேயே லவ்பண்றானாம்  daily வீட்டுக்கு வந்து நொய்நொய்ம்பான், இவனுக்காக டெய்லி
காலைலயும் சாயந்தரமும்,அலெக்ஸ் வீட்டுக்கும்,எங்க வீட்டுக்கும் லோ லோனு அலைவோம், (அலெக்ஸ் வீட்டு பக்கத்துலதான் அந்த பொண்ணோட வீடு) 
இதுல நடுவுல ஆகிற செலவு எல்லாம் பாஸோடதுதான்,அவனும் அலுத்துகாம செலவு பண்ணுவான், அலெக்ஸ் எப்படியோ அவள்ட பேசி பாஸ்கர லவ்பண்ண வச்சிட்டான்,
பாஸுக்கு பயங்கர சந்தோசம் டெய்லி அவ கூடவே பஸ்ல போயிட்டு கூடவே வருவான்,
அவளுக்கு நிறைய செலவு பண்ணினான்,ஆனா ஒன்னும் வேலைக்கே ஆகல
அதுவும் கொஞ்சகாலம்தான் நீடிச்சது அவளுக்கு மாப்ள பாக்க ஆரம்பிசிட்டாக ஆனா பாஸ்கர் தெளிவா முடிவுஎடுத்தான் கல்யாணம்லாம் இப்ப முடியாது மாப்ள அவ கல்யாணம் பண்ணனும்னா பண்ணிக்கட்டும் வருத்தம்தான்  ஆனா familyஅ பாக்கணும்டானுடான், உடனே அலெக்ஸ்க்கு  பயங்கர கோபம் வந்துட்டு ஏய் நீயே வந்து
முடியாதுன்னு சொன்னவள கம்பல் பண்ணி லவ் பண்ணிட்டு இப்ப கல்யாணம்னதும்
விட்டுட்டு ஓடரியே நீயெல்லாம் ஆம்பளையானான்,அதுக்கு என்ன மாப்ள பண்றது அவஎன் 
familyக்கு setஆவ மாட்டாடா,அத நீ நாயி மாதிரிஅவ பின்னாடி போறப்ப யோசிச்சிருக்கணும்,அது சரி மாப்ள, உன்ன மாதிரிலாம் என்னால லாஜிக்லாம் பேச முடியாது 
லவ் வேற கல்யாணம் வேற இதுல னான் தெளிவா இருக்கேன் என்ன விட்ருடா"    இப்படி
ரெண்டு பேரும் பாக்குரப்பலாம் சண்ட போட்டுப்பானுக ,அதுக்கப்புறம் னான் சென்னை போய்ட்டேன் அடுத்த கொஞ்சநாள்ல மலேசியா வந்துட்டேன் இந்த நேரத்துல தான் அலெக்ஸ்க்கு கல்யாணம் நடந்தது 

                                                                                                                        தொடரும் ....







நண்பர்களே! இந்த உலகத்துல நமக்குன்னு எந்த  உயிரும் இல்லன்ற  கணத்தில் தான் தற்கொலைகள் நடக்க ஆரம்பிக்குது,இவ்வளவு நெருக்கமா வாழ்ற நமக்குள்ளேயே இவ்வளவு அந்நியப்ட்டுப்போன மனிதர்களும் இருப்பதை நாமெல்லாம் உணரனும்
நாமசெய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு individuality இருகிறத நாமெல்லாம் உணரனும் பொதுவான மதிப்பீடுகளால் தனிமனிதனை மதிப்பிடும் பொதுபுத்தியிலிருந்து விடுபடவேண்டும். பக்கதுல இருக்குற
  மனிதனின் ஆசைகள்,நிராசைகள காதுகொடுத்து கேட்டாலே அவனோட பாதி பிரச்னை குறைஞ்சிடும்,நம்மில் இன்னொரு அலெக்ஸ் உருவாகாம இருக்கும் போதுதான் நம் வாழ்வின் மதிப்பு உயரும் .    


மரணத்தை நோக்கியப்பாதை... 1

இடுகையிட்டது குருமூர்த்தி 7 டிச., 2009 0 கருத்துகள்


தனது பிறந்த தினத்தன்றே தற்கொலை
 செய்து கொண்ட நண்பனின்
 நினைவலைகள் ...   


உயிரைவிட்டு விடுவதால்
உறவாய் வந்த பிரச்சனைகள்
உதிர்ந்துவிடுமா...?
உலர்ந்துதான் விடுமா...?

உயிரைக்கொண்டு
பிரச்சனையைப் பார்ப்பதைவிட
அறிவைக்கொண்டு
பார்வையிட்டால்
அறவழி பிறக்கும்
அஞ்ஞானம் விழக்கும்...

எந்த எண்ணத்தில்
இறக்கின்றோமோ
அதே எண்ணத்தில்
எழுப்பப் படுவோம்
என்கிறது இஸ்லாம்...

உடலைமாய்த்துக் கொள்வதால்
ஆன்மா அமைதியடைவதில்லை
உடலை வைத்துதான்
உண்மையை விளங்கமுடியும்
தன்னையும் அறியமுடியும்...

தன்னைமாய்த்துக் கொண்டு
சார்ந்தவர்களுக்கு
சந்தாபம் தந்துவிட்டு
கோழையாய் பாடையில்
போவதைவிட
உடையவர்களுக்கு
உறுதுணையாய்
உணவாய் உணர்வாய்
உணர்ச்சியாய் உரிமையாய்
உயிர்தந்து வாழ்வதற்கு
உங்களை
தற்கொலை செய்துக்கொள்ளுங்கள்...(எங்கோ படித்தது)
 
இன்னும் எனக்குபுரியல இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு. அவன எனக்கு பாஸ்கர் தான் introduce பண்ணி வச்சான். நல்லாதான் பழகுவான் எப்பவும் ரொம்பcoolஆ இருப்பான்
அவன பொறுத்தவரையில் இந்த உலகத்துல தன்னைவிட அறிவாளி யாருமில்ல.. யாரு எத சொன்னாலும் கேட்கவேமாட்டான், அவனுக்கே தெரியும் அவனோட நல்லதுக்குத்தான் சொல்றோம்னு ஆனா இவனுக சொல்லி நாம கேட்டா நமக்கேது மரியாதைன்னு நினைப்பான்.
Actualaaஅவனுக்கு கொஞ்சமா சம்பாரிச்சி முன்னுக்கு வாரத்திலலாம் நம்பிக்கையே கிடையாது.ஒரு பெரிய Jump எதிர்பார்த்தான்.அதுதான் அவனுக்கு இப்ப வினையா முடிஞ்சிருச்சி.

                                      "மாப்ள புள்ள புடிக்கிறவன் மாதிரியே இருக்கடா"

எப்படின்னு தெரியல phsycalலா அவனுக்கு நிறைய பிரச்னை இருந்தது. ஆரம்பத்துல ஒருநாள் அவன Vedio coverageஎடுக்குறதுக்குLight boyஇல்லனு, அழைச்சிட்டு நாகப்பட்டினம் போனேன்.
அது 3நாள் Function முதல் நாள் ஒழுங்கா இருந்தான் 2 ம் நாள் night tiredஆ இருக்கு தண்ணி போடலாம்னு சொன்னேன் இவன் எதாவது எழரையை இழுத்துடுவானுட்டு தெரிஞ்சிதான் ஆளுகொரு Beerமட்டும் போட்டோம் இன்னொன்னு வாங்கு மச்சான்னான் டேய் Functionநடக்குற வீட்ல படுக்கணும் போதும் வாடான்னேன்.ஒண்ணுமே சொல்லாம வந்தான் sigrateபத்த வைச்சிட்டு நாலுகால் மண்டபம் பக்கத்துல ஒக்காந்தோம்,sideல சாராயம் அட்டிசிட்டு ஒரு மீன் விக்கிறவன் பினாத்திகிட்டு இருந்தான் அவன இவன் கல்ல எடுத்து அடிச்சான்,அவன் எழுந்து கிட்டவந்து டேய் ஏன்டா என்ன கல்லால அடிச்சிங்கன்னான்,இவன் ங்கோத்தா ஏன்டா உன்ன அடிக்ககூடாதுன்னான்.அவனுக்கு வயசு 45 க்கு மேல இருக்கும் .நான் உடனே விடுங்க பாஸு எல்லாம் நம்ம கைங்க தான் கல்லால அடிச்சதுகெல்லாமா கோவிச்சிகிறதுன்னேன்.அவன் டேய் உங்ககிட்ட காசு இருக்குனு திமிருல ஆடதிங்கடா இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லு நான் வாங்கிதரேன்னான் உடனே இவன் நீயே மூட்டைய அடிச்சிட்டு முட்டிட்டு நிக்கிற எனக்கு எப்படிடா வாங்கி தருவனான்.அவன் வேகமா திரும்பி போனான்,நான் இவன்ட வாடா போய்டலாம் ன்னேன் இரு மச்சான் என்ன பண்றான்னு பாப்பும்ன்னான். என்னோட கெட்டநேரம் போனவன் இரண்டு 5000 னோட வந்தான் கூடவே ஒரு ஆளையும் கூட்டிவந்தான் 5000அ கொடுத்து குடிக்கசொன்னான் இவன் அத வாங்கி கீழ போட்டு டம்ம்னு ஒடச்சன் ங்கோத்தா பாடு என்ன என்ன 5000 குடிக்கிற பன்னாடன்னு நெனைச்சியா King fisherவாங்கிட்டுவாடானான்.எனக்கு மயக்கமே வந்திடுச்சி ,ரெண்டுபேரும் சத்தம் போட்டுடே இருந்தானுக திடிர்னு இவன ஆள காணும்,அப்டிஇப்டினு அவனுகள கழட்டிவிட்டுட்டு வீட்டுக்கு வந்தா ஹாயா Functionக்கு வந்த குழந்தைகள்ட்ட விளையாடிட்டு இருக்கான் .
இவன் cattering படிச்சிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம் நடந்திச்சி, எதோ பிரச்சனைல இவனோட collageல இவனோட சேர்த்து ஒரு 11 பேருக்கு 500 ரூபா fine போட்டானுகபோல அந்த finea கட்ட இவனோட ego இடங்கொடுக்கல,நேரா வந்துட்டான் கீழ்வேலூர் நீ வா மச்சான் என்னோட collage propriter ரோட அண்ணன் திருத்துறைபூண்டிADMK மாவட்டசெயலாளர் அவர்ட பேசலம்னான் இவனுக்கு பாஸ்கர் வேற support
அங்க போய் என்ன காட்டி இவன்Guruதிருச்சில பெரிய கைட்ட(ஒரு அமைச்சர்) இருக்கான் ஏதும் சம்பவம் னா சொல்லுங்க செஞ்சி தருவானுட்டான்.நான் விவேக் மாதிரி கண்ணுல கலவரம் தெரியாமCooling glassபோட்டு மறைசிக்கிட்டேன்.
பிறகு அவர் தம்பிக்கு போன் பண்ணிFineவேண்டானுட்டாணுக.
ஆகமொத்தம் அதுக்கு நாங்க பண்ண செலவு2000ரூபா

அதுக்கு பிறகு அவங்க அக்கா கல்யாணம் வந்தது நான் தான் vedio எடுத்தேன்.மொத நாள் night சரியானபோதை காலைல அரபோதைல vedio எடுத்துட்டு இருக்கேன் அதுக்குள்ள கீரங்குடி கைங்களுக்கும் மணக்கால் பாலு க்கும் மண்டபத்துக்கு வெளிய பயங்கர சண்டை சரின்னு ஸ்ரீதர்ட்ட கேமராவ கொடுத்துட்டு வெளிய போய் சண்டைய தடுத்துட்டு இருக்கேன் அதுக்குள்ள பட்டாகத்தி முருகானந்தம் பாலுவ ஒதைக்க போய் ஸ்லிப் ஆயி என் இடுப்புல ஒதைசிட்டான் அதுக்கப்புறம் என்னால ஒன்னும் பண்ண முடியல பயங்கர வலி திரும்ப வந்து vedioவும் சரியா எடுக்கமுடியல,எதோ ஒப்புக்கு எடுத்து முடிச்சிட்டேன்.


கொஞ்ச நாள் லேயே அவனோட இன்னொரு அக்கா கல்யாணம் வந்தது நாகபட்டினத்ல கல்யாணம் பொதுவா முகுர்த்த நாட்கள்ல நான் busy யா இருப்பேன் அவன் முன்னாடியே சொல்லிட்டான் காசு கொடுக்குரானுங்கனுட்டு தேவிடியா மாதிரி பின்னாடியே போய்டாத அக்கா கல்யாணம் இருக்குனான்.
நீ கீழ்வேளுர்ல இரு நான் பொண்ணு அழைச்சிட்டு போறப்ப picup பண்ணிகிறனான்
அன்னைக்கு ஸ்டுடியோல யாரும் இல்ல என்னோட boss வெளில போய்ட்டாரு அந்த நேரம் பார்த்து van ல வந்து என்ன கூப்பிட்டான் டேய் நீ போடா boss வந்ததும் நான் வரேன்னா கேட்கமாட்றான் நீ வா வந்தா தான் van போகமுடியும் ங்கறான்,van ல அவனோட சொந்தகாரங்க நிறைய பேர் யாரு சொல்லியும் கேட்கவேஇல்ல கடைசியா எல்லோரும் 1/2 மணி நேரம் wait பண்ணிபோனோம்.
அவன பொறுத்தவரையில இந்த நல்லவன்-கெட்டவன்,படிச்சவன்-படிக்காதவன்,பணம் இருக்கறவன்-இல்லாதவன்ர பேதமே இல்ல எல்லாரையும் மனுசனாதான் எதிர்கொள்வான்.
இந்த நேரத்துல
தான் அவனுக்கு Love ஸ்டார்ட் ஆச்சி...




"குறிப்பிட்ட சூழலில் தனிமனிதர்கள் தவறு செய்யகூடும் அதை புரிந்து கொள்ளாமல்
இந்த சமூகமும் சமுக மனிதர்களும் எந்த குற்றஉணர்வுமற்று தண்டனை வழங்குவதும் அதே தண்டனைக்கு தாம் ஆளாகும்போது அது குறித்து சங்கட படுவதும் வெறும் வார்த்தையால மட்டுமே ஒருவனை தற்கொலை வரை கொண்டுசெல்லும் ஒரு மோசமான சமுகத்தில் வாழ்வது குறித்தும் யாருக்கும் எந்த குற்றஉணர்வும் இல்லை"


தொடரும்....

இனமும் ,உணர்வும்...

இடுகையிட்டது குருமூர்த்தி 15 ஜன., 2009 0 கருத்துகள்


மலேயாவிலுள்ள காடுகளை அழித்து, ரப்பர் மரங்களை வளர்த்து, ரப்பர் பால் சேகரிக்கும் வேலை செய்ய தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் அழைத்துச் செல்லப்பெற்ற தமிழர்களின் புலம்பெயர்வு குறிப்பிடத்தக்கது. இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் என அழைக்கப்பெறும் பகுதிகள் கடும் வறட்சிக்குள்ளாகக்கூடியன. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை அடிக்கடி பொய்த்துவிடும். இதனால் வாழ வழியற்ற தமிழர்கள் மலேயாவிற்குப் புலம்பெயந்தனர். .
அதே வேளையில் வட்டித் தொழில் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் மலேயாவுக்குச் சென்றனர். சீனர்களுக்கும் மலேசியருக்கும் வட்டிக்குப் பணம் தந்து பொருளீட்டிய செட்டியார்களும், அவர்களுடைய கடைகளில் வேலை செய்ய வேறு சாதியினரும் பொருளியல் ரீதியில் வளமானவர்கள்.
மலைக் காடுகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த தமிழர்கள் கடுமையான சுரண்டலுக்குள்ளாயினர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினர். 1960களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக மலேயாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினாலும், இன்று வரையிலும் மலேசியா மக்கள் தொகையில் 8% தமிழர்கள்.