இனமும் ,உணர்வும்...

இடுகையிட்டது குருமூர்த்தி 15 ஜன., 2009

மலேயாவிலுள்ள காடுகளை அழித்து, ரப்பர் மரங்களை வளர்த்து, ரப்பர் பால் சேகரிக்கும் வேலை செய்ய தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் அழைத்துச் செல்லப்பெற்ற தமிழர்களின் புலம்பெயர்வு குறிப்பிடத்தக்கது. இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் என அழைக்கப்பெறும் பகுதிகள் கடும் வறட்சிக்குள்ளாகக்கூடியன. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை அடிக்கடி பொய்த்துவிடும். இதனால் வாழ வழியற்ற தமிழர்கள் மலேயாவிற்குப் புலம்பெயந்தனர். .
அதே வேளையில் வட்டித் தொழில் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் மலேயாவுக்குச் சென்றனர். சீனர்களுக்கும் மலேசியருக்கும் வட்டிக்குப் பணம் தந்து பொருளீட்டிய செட்டியார்களும், அவர்களுடைய கடைகளில் வேலை செய்ய வேறு சாதியினரும் பொருளியல் ரீதியில் வளமானவர்கள்.
மலைக் காடுகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த தமிழர்கள் கடுமையான சுரண்டலுக்குள்ளாயினர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினர். 1960களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக மலேயாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினாலும், இன்று வரையிலும் மலேசியா மக்கள் தொகையில் 8% தமிழர்கள்.





ஆனால்  இன்றைய நிலைமையில் சிறையில் இருப்போரில் 40 % க்கு மேல் தமிழர்கள்
இதோடு மட்டுமல்ல தினம் தினம் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் சுட்டு
 கொள்ளப்படும் இளைஞர்களும் அதிகம்.இங்க வந்து 3 தலைமுறை ஆனாலும்
போஸ்டர் ஓட்டறது ,பேனர் கட்டறது ,அரசியல் வாதிகளுக்கு துதிபாடறது இதெல்லாம்
இன்னும் போகல நம்ம கைகளுக்கு ,இன்னொன்னு என்னனா வெள்ளையா இருக்கறவன் உயர்ந்தவன்
கருப்பா இருக்குறவன் தாழ்ந்தவன்னு ஏற்கனவே நம்ம ஜீன்ல இருக்கு இவன் கொஞ்சம் மாத்தி மலாய்காரன்உயர்ந்தவன்ர மாதிரி செட் பண்ணிகிட்டான்.
 ஆனா ஒரு தமிழ்நாட்டு தமிழன பாத்தா போதும் சிக்கிடாண்டா அடிமைனுட்டுஅவன
மிரட்டி காச பறிச்சிடுவாணுக, இந்த இந்தோனேசியாகாரன்,பங்களாதேஷ்
காரன்டலாம் ஒன்னும்பண்ணமாட்டானுக ஏன்னாஅவன் வெட்டிபுடுவான்னு
 கொஞ்சம் பயம்,தமிழ்நாட்டு காரனுக்கு இவன் வச்சிருக்கிற பெயர் "ஊர்காரன்"
ஆனா இவன மலாய் காரனுக "கிளிங்"னு கூப்ட்ரதபத்தி கவலையே படமாட்டான்.

இன்னொன்னு என்னனா இந்த கவர்மெண்டே இவனுக்கும் தமிழ்நாட்டு தமிழனுக்கும்
 இருக்கிற  நல்லுறவை கெடுக்குறமாதிரி சில வேலைல்லாம் செய்றானுக இங்குள்ள
 தமிழனுக்கு குப்ப அள்றது,சாக்கடநோண்டறது ,இந்தமாதிரி வேலைக்குதான்
வெளிநாட்லஇருந்துஆளெடுக்கபெர்மிட்கொடுக்குராணுக இவன் அங்கிருந்து ஆளெடுத்து வந்து என்ன வேல கொடுப்பான்,
கம்பெனி வேலைக்கும்,ஜெனரல்வொர்கர் மாதிரி சில வேலைகளுக்கும் அவுட் சௌர்சிங் ல ஆள்எடுக்கணும்னா ஒரு மலாய்காரன 40 % பார்ட்னரா
வசிருந்தாதான் அவனுக்குஆள்எடுப்பதற்கானபெர்மிட்டே கிடைக்கும்,
தமிழ்நாட்டிலிருந்து இங்கு வேலைக்கு வரும் ஒரு இளைஞன்
50,000 லிருந்து 70,000  வரையிலும் விசாவுக்கு  பணம்  கட்டி இங்கு வந்து மாதம் Rm1000 வெள்ளி சம்பாதிப்பதே முடியாதகாரியம்,இதுல வருசத்துக்கு 2000 வெள்ளி சராசரியா ஒரு நாளைக்கு 7 வெள்ளிகிட்ட (70 ரூபா) லெவின்ற பேர்ல இந்த government க்கு கட்டனும்,
இது இல்லாம local ல நாம தங்குற வீட்டுக்கு பக்கதுல எவனாவது ரவுடி அவனுக்கு இங்க பேரு  "மண்ட" இருந்தானா அவனுக்கும் கப்பம் கட்டனும்,
இதுக்கும் மேல வேலை முடிஞ்சி போறப்ப,வறப்ப ரோட்ல திருட்டு பயலுகநிப்பானுகஅவங்கள்ட மாட்னா  கைல இருக்கிற  செல்போன்,பணம் 
இதெல்லாம்கொடுத்திட்டுவர வேண்டியதுதான்,இல்லனா வெட்டிபுடுவாணுக
இதோடமட்டுமில்ல போலீஸ் தொந்தரவு வேற என்னதான் ஒழுங்கா பெர்மிட்,பாஸ்போர்ட்லாம் வச்சிருந்தாலும் அவன் புடிசிட்டானா காசு கொடுக்காம வரவே முடியாது ஒரு நல்ல செல்போன் வச்சிருந்து அவனுக்கு அது புடிச்சிபோச்சின்னா அவன்ட கொடுத்துட்டு வர வேண்டியதுதான் கொடுக்க முடியாதுன்னா அத அங்கேயே ஒடச்சி நம்ம கைல கொடுத்திடுவான் எப்படியோ இழப்பு நமக்குதான்.
இப்படிதான் ஒரு தடவை என் கூட்டாளி ராமகிருஷ்ணனும்,

ராமகிருஷ்ணன்
ஞானதிரவியமும்  overtimeபாத்துட்டு நைட் 12மணிக்கு வீட்டுக்கு திரும்பி இருக்கானுக  பஸ் இல்லங்கறதால நடந்தே வந்திருக்காணுக, இடையில 2மோட்டார்ல 4பேர் இவனுகள மறைச்சிஇருக்கானுக "டேய் ஊர்கார ...ட நில்லுங்காடா "  அண்ணே பஸ் இல்ல எங்கள்ட்ட 10 வெள்ளி தான் காசு இருக்கு வேற ஒன்னும் இல்லண்ணே"னுட்டு 10 வெள்ளிய கொடுதிருக்காணுக "வெறும் 10வெள்ளிய வச்சிக்கிட்டு என்னா..டைக்குமலேசியா வரிங்க "னுட்டு ஒருத்தன் செக் பண்ணிடிருக்கும்போதே பின்னாலிலிருந்து ஒருத்தன் அரிவாளால் தலையில் வெட்டி இருக்கிறான். இதில் ஞான திரவியம் ஓடும் போது ஒருவன் முதுகில் வெட்டிஇருக்கிறான், நைட்ஒருமணிக்கு அந்த ஹைவேல
இவனுகள கண்டுக்க ஒருநாதியும் இல்ல நைட் 2 மணிக்கு 3 km நடந்தே ரத்தம் சொட்ட சொட்ட ரூமுக்கு வந்து சேர்ந்தாணுக வந்த உடனே ராம கிருஷ்ணன் மயங்கிட்டான் அதுக்கு பிறகு அவன டாக்டர்ட்ட அழைச்சிட்டு போய் தலைல 16 தையல் கைல 4 தையல் போட்டோம் .
இதுவரைக்கும் ஒருமலாய்காரனோ,சீனனோ இதமாதிரிசெஞ்சதா நான் கேள்விபட்டது கூட இல்ல. எல்லாரும் இப்படிதான்னு சொல்லல இப்படியும்
ஆட்கள் இங்க இருக்காங்கங்கறதுதான் இதன் நோக்கம்.
ஆகமொத்ததுல இப்படி இருக்கு நம் தமிழர்களின்,இனவுணர்வு ... 
இது ரொம்ப நீள்றதுனால அடுத்த பதிவுல பாக்கலாம் .....


 



 
     

0 கருத்துகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்