செய்து கொண்ட நண்பனின்
நினைவலைகள் ...
உயிரைவிட்டு விடுவதால்
உறவாய் வந்த பிரச்சனைகள்
உதிர்ந்துவிடுமா...?
உலர்ந்துதான் விடுமா...?
உயிரைக்கொண்டு
பிரச்சனையைப் பார்ப்பதைவிட
அறிவைக்கொண்டு
பார்வையிட்டால்
அறவழி பிறக்கும்
அஞ்ஞானம் விழக்கும்...
எந்த எண்ணத்தில்
இறக்கின்றோமோ
அதே எண்ணத்தில்
எழுப்பப் படுவோம்
என்கிறது இஸ்லாம்...
உடலைமாய்த்துக் கொள்வதால்
ஆன்மா அமைதியடைவதில்லை
உடலை வைத்துதான்
உண்மையை விளங்கமுடியும்
தன்னையும் அறியமுடியும்...
தன்னைமாய்த்துக் கொண்டு
சார்ந்தவர்களுக்கு
சந்தாபம் தந்துவிட்டு
கோழையாய் பாடையில்
போவதைவிட
உடையவர்களுக்கு
உறுதுணையாய்
உணவாய் உணர்வாய்
உணர்ச்சியாய் உரிமையாய்
உயிர்தந்து வாழ்வதற்கு
உங்களை
தற்கொலை செய்துக்கொள்ளுங்கள்...(எங்கோ படித்தது)
இன்னும் எனக்குபுரியல இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு. அவன எனக்கு பாஸ்கர் தான் introduce பண்ணி வச்சான். நல்லாதான் பழகுவான் எப்பவும் ரொம்பcoolஆ இருப்பான்
அவன பொறுத்தவரையில் இந்த உலகத்துல தன்னைவிட அறிவாளி யாருமில்ல.. யாரு எத சொன்னாலும் கேட்கவேமாட்டான், அவனுக்கே தெரியும் அவனோட நல்லதுக்குத்தான் சொல்றோம்னு ஆனா இவனுக சொல்லி நாம கேட்டா நமக்கேது மரியாதைன்னு நினைப்பான்.
Actualaaஅவனுக்கு கொஞ்சமா சம்பாரிச்சி முன்னுக்கு வாரத்திலலாம் நம்பிக்கையே கிடையாது.ஒரு பெரிய Jump எதிர்பார்த்தான்.அதுதான் அவனுக்கு இப்ப வினையா முடிஞ்சிருச்சி.
"மாப்ள புள்ள புடிக்கிறவன் மாதிரியே இருக்கடா"
எப்படின்னு தெரியல phsycalலா அவனுக்கு நிறைய பிரச்னை இருந்தது. ஆரம்பத்துல ஒருநாள் அவன Vedio coverageஎடுக்குறதுக்குLight boyஇல்லனு, அழைச்சிட்டு நாகப்பட்டினம் போனேன்.
அது 3நாள் Function முதல் நாள் ஒழுங்கா இருந்தான் 2 ம் நாள் night tiredஆ இருக்கு தண்ணி போடலாம்னு சொன்னேன் இவன் எதாவது எழரையை இழுத்துடுவானுட்டு தெரிஞ்சிதான் ஆளுகொரு Beerமட்டும் போட்டோம் இன்னொன்னு வாங்கு மச்சான்னான் டேய் Functionநடக்குற வீட்ல படுக்கணும் போதும் வாடான்னேன்.ஒண்ணுமே சொல்லாம வந்தான் sigrateபத்த வைச்சிட்டு நாலுகால் மண்டபம் பக்கத்துல ஒக்காந்தோம்,sideல சாராயம் அட்டிசிட்டு ஒரு மீன் விக்கிறவன் பினாத்திகிட்டு இருந்தான் அவன இவன் கல்ல எடுத்து அடிச்சான்,அவன் எழுந்து கிட்டவந்து டேய் ஏன்டா என்ன கல்லால அடிச்சிங்கன்னான்,இவன் ங்கோத்தா ஏன்டா உன்ன அடிக்ககூடாதுன்னான்.அவனுக்கு வயசு 45 க்கு மேல இருக்கும் .நான் உடனே விடுங்க பாஸு எல்லாம் நம்ம கைங்க தான் கல்லால அடிச்சதுகெல்லாமா கோவிச்சிகிறதுன்னேன்.அவன் டேய் உங்ககிட்ட காசு இருக்குனு திமிருல ஆடதிங்கடா இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லு நான் வாங்கிதரேன்னான் உடனே இவன் நீயே மூட்டைய அடிச்சிட்டு முட்டிட்டு நிக்கிற எனக்கு எப்படிடா வாங்கி தருவனான்.அவன் வேகமா திரும்பி போனான்,நான் இவன்ட வாடா போய்டலாம் ன்னேன் இரு மச்சான் என்ன பண்றான்னு பாப்பும்ன்னான். என்னோட கெட்டநேரம் போனவன் இரண்டு 5000 னோட வந்தான் கூடவே ஒரு ஆளையும் கூட்டிவந்தான் 5000அ கொடுத்து குடிக்கசொன்னான் இவன் அத வாங்கி கீழ போட்டு டம்ம்னு ஒடச்சன் ங்கோத்தா பாடு என்ன என்ன 5000 குடிக்கிற பன்னாடன்னு நெனைச்சியா King fisherவாங்கிட்டுவாடானான்.எனக்கு மயக்கமே வந்திடுச்சி ,ரெண்டுபேரும் சத்தம் போட்டுடே இருந்தானுக திடிர்னு இவன ஆள காணும்,அப்டிஇப்டினு அவனுகள கழட்டிவிட்டுட்டு வீட்டுக்கு வந்தா ஹாயா Functionக்கு வந்த குழந்தைகள்ட்ட விளையாடிட்டு இருக்கான் .
இவன் cattering படிச்சிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம் நடந்திச்சி, எதோ பிரச்சனைல இவனோட collageல இவனோட சேர்த்து ஒரு 11 பேருக்கு 500 ரூபா fine போட்டானுகபோல அந்த finea கட்ட இவனோட ego இடங்கொடுக்கல,நேரா வந்துட்டான் கீழ்வேலூர் நீ வா மச்சான் என்னோட collage propriter ரோட அண்ணன் திருத்துறைபூண்டிADMK மாவட்டசெயலாளர் அவர்ட பேசலம்னான் இவனுக்கு பாஸ்கர் வேற support
அங்க போய் என்ன காட்டி இவன்Guruதிருச்சில பெரிய கைட்ட(ஒரு அமைச்சர்) இருக்கான் ஏதும் சம்பவம் னா சொல்லுங்க செஞ்சி தருவானுட்டான்.நான் விவேக் மாதிரி கண்ணுல கலவரம் தெரியாமCooling glassபோட்டு மறைசிக்கிட்டேன்.
பிறகு அவர் தம்பிக்கு போன் பண்ணிFineவேண்டானுட்டாணுக.
ஆகமொத்தம் அதுக்கு நாங்க பண்ண செலவு2000ரூபா
அதுக்கு பிறகு அவங்க அக்கா கல்யாணம் வந்தது நான் தான் vedio எடுத்தேன்.மொத நாள் night சரியானபோதை காலைல அரபோதைல vedio எடுத்துட்டு இருக்கேன் அதுக்குள்ள கீரங்குடி கைங்களுக்கும் மணக்கால் பாலு க்கும் மண்டபத்துக்கு வெளிய பயங்கர சண்டை சரின்னு ஸ்ரீதர்ட்ட கேமராவ கொடுத்துட்டு வெளிய போய் சண்டைய தடுத்துட்டு இருக்கேன் அதுக்குள்ள பட்டாகத்தி முருகானந்தம் பாலுவ ஒதைக்க போய் ஸ்லிப் ஆயி என் இடுப்புல ஒதைசிட்டான் அதுக்கப்புறம் என்னால ஒன்னும் பண்ண முடியல பயங்கர வலி திரும்ப வந்து vedioவும் சரியா எடுக்கமுடியல,எதோ ஒப்புக்கு எடுத்து முடிச்சிட்டேன்.
கொஞ்ச நாள் லேயே அவனோட இன்னொரு அக்கா கல்யாணம் வந்தது நாகபட்டினத்ல கல்யாணம் பொதுவா முகுர்த்த நாட்கள்ல நான் busy யா இருப்பேன் அவன் முன்னாடியே சொல்லிட்டான் காசு கொடுக்குரானுங்கனுட்டு தேவிடியா மாதிரி பின்னாடியே போய்டாத அக்கா கல்யாணம் இருக்குனான்.
நீ கீழ்வேளுர்ல இரு நான் பொண்ணு அழைச்சிட்டு போறப்ப picup பண்ணிகிறனான்
அன்னைக்கு ஸ்டுடியோல யாரும் இல்ல என்னோட boss வெளில போய்ட்டாரு அந்த நேரம் பார்த்து van ல வந்து என்ன கூப்பிட்டான் டேய் நீ போடா boss வந்ததும் நான் வரேன்னா கேட்கமாட்றான் நீ வா வந்தா தான் van போகமுடியும் ங்கறான்,van ல அவனோட சொந்தகாரங்க நிறைய பேர் யாரு சொல்லியும் கேட்கவேஇல்ல கடைசியா எல்லோரும் 1/2 மணி நேரம் wait பண்ணிபோனோம்.
அவன பொறுத்தவரையில இந்த நல்லவன்-கெட்டவன்,படிச்சவன்-படிக்காதவன்,பணம் இருக்கறவன்-இல்லாதவன்ர பேதமே இல்ல எல்லாரையும் மனுசனாதான் எதிர்கொள்வான்.இந்த நேரத்துல
தான் அவனுக்கு Love ஸ்டார்ட் ஆச்சி...
"குறிப்பிட்ட சூழலில் தனிமனிதர்கள் தவறு செய்யகூடும் அதை புரிந்து கொள்ளாமல்
இந்த சமூகமும் சமுக மனிதர்களும் எந்த குற்றஉணர்வுமற்று தண்டனை வழங்குவதும் அதே தண்டனைக்கு தாம் ஆளாகும்போது அது குறித்து சங்கட படுவதும் வெறும் வார்த்தையால மட்டுமே ஒருவனை தற்கொலை வரை கொண்டுசெல்லும் ஒரு மோசமான சமுகத்தில் வாழ்வது குறித்தும் யாருக்கும் எந்த குற்றஉணர்வும் இல்லை"
தொடரும்....


0 கருத்துகள்