இன்னைக்கும் எங்க group ல பாசுக்கு மட்டுந்தான் அவனோட girlfrindஅ தெரியும் வேறு யாருக்கும் தெரியாது.அவனோட காதல் போன்ல மட்டுந்தான் வளர்ந்தது அவங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்து பேசுனதெல்லாம் ரொம்ப rare ஒரு நாளைக்கு கொறைச்சலா 20 மணி நேரம் பேசுவான்,எப்படித்தான் recharge பண்றான் என்னதான் பேசுவானே தெரியாது காலைல toiletல பேசுவான்,busல பேசுவான்,barல பேசுவான் எங்களுக்கெல்லாம் பயங்கர வெறுப்பாஇருக்கும் சொன்னாதான்கேட்க மாட்டானே,
குடும்பம்,நட்பு பற்றிலாம் கவலையேபடல,ரொம்ப தீவிரமா இருந்தான்
தீவிரம்னா காதல்னு சொல்லலாம் முடியாது எந்த உறவிலும் ஆரம்பத்துல அதிக ஈடுபாடு காட்டுவான் அடுத்த கொஞ்ச நாள்லவிட்டேத்தியா இருப்பான் அவனோட மனநிலைகேற்ற சூழ்நிலையும், மனிதர்களும் இல்லாத சூழ்நிலையில் ஓயாத பகடியின் மூலம் அவன் தனது வெறுப்பை வெளிபடுதிக்கொண்டே இருப்பான்.
இதுதான்அவனோட முதல்காதல்,இந்த காதல்ஒருவருடத்துக்கு மேல smoothஆ போய்ட்டு
இருந்திச்சி அதுக்கப்புறம் ஆரம்பிச்சிட்டான் நான் கல்யாணம் பண்ணபோறேன்னான்
எனக்கு இதுல சுத்தமா உடன்பாடே இல்ல,அந்த பொண்ணோட அப்பா foreinla ருந்து வறாரு
அவர் வந்ததும் நீங்கல்லாம் வாங்கடா போய் பேசலம்னான் எனக்கும் சும்மா போய் பேசி பாக்கலாம்னு ஒரு ஆசை இருந்தது,சரி போலாண்டா போன் பண்ணுடான்னு சொல்லிட்டு நானும் அத மறந்திட்டன்
திடிர்னு ஒரு நாள் போன் பண்ணான் மச்சான் எங்க இருக்கனான்
busstandலவெய்ட்பண்றேன் சீக்கிரம் வானான், வந்தாகைலகட்டுபோட்டுட்டு நிக்கிறான் என்னடா ஆச்சுன்னா மச்சான்நானும்,சுரேஷும் போய் பேசுனோம்டா வரப்ப
கார் accident ஆயிடுச்சினான் சரி என்னடா பேசுனிங்க" அதாமச்சான் 30 பவுன் நகையும்,ஒரு வீடும் தரேன்னு சொல்றானுக பின்னால சின்னதா ஒரு மினிமார்கெட் வச்சி தரதா சொல்றானுகடானான்
டேய் இதெல்லாம் வேலைக்கே ஆகாது அப்படி ஏதும் அவசரம்னா வா வேளாங்கண்ணி போயிட்டு
வந்துடலாம்னேன், டேய் மொக்க அது இல்லடா எங்கப்பன்ட பணம் கேட்டாலும் தர மாற்றான்,
என்னாலலாம் அடுத்தவன்ட உன்ன மாதிரி பண்ணையாளாட்டம்லாம் வேல செய்யமுடியாதுடா ஏதாவது பிசினஸ் பண்ணனும் ஒனக்கு ரெண்டு சாய்ஸ் தரன் ஒன்னு எனக்கு கல்யாணம் பண்ணிவை இல்ல பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுனுசொன்னான்,"சாமிசைக்கிள போறப்ப பூசாரிக்கு புல்லட்டா,என்னாலலாம் ஒன்னும் பண்ண முடியாதுன்னு" சொல்லிட்டேன்,இந்த கல்யாணம் நடக்காதுன்னு உறுதியா நம்புனேன்,அதுக்கப்றம் அவனோட கூட்டாளி சுரேஷ் எதோ லவ் பிரச்சனைல தற்கொலை பண்ணிகிடடான்,
இதுல பாஸ்கர் வேற லவ்பண்ண ஆரம்பிச்சிட்டான் அவனோட class mateஅ 3 வருசமா அவளுக்கு தெரியாமலேயே லவ்பண்றானாம் daily வீட்டுக்கு வந்து நொய்நொய்ம்பான், இவனுக்காக டெய்லி
காலைலயும் சாயந்தரமும்,அலெக்ஸ் வீட்டுக்கும்,எங்க வீட்டுக்கும் லோ லோனு அலைவோம், (அலெக்ஸ் வீட்டு பக்கத்துலதான் அந்த பொண்ணோட வீடு)
காலைலயும் சாயந்தரமும்,அலெக்ஸ் வீட்டுக்கும்,எங்க வீட்டுக்கும் லோ லோனு அலைவோம், (அலெக்ஸ் வீட்டு பக்கத்துலதான் அந்த பொண்ணோட வீடு)
இதுல நடுவுல ஆகிற செலவு எல்லாம் பாஸோடதுதான்,அவனும் அலுத்துகாம செலவு பண்ணுவான், அலெக்ஸ் எப்படியோ அவள்ட பேசி பாஸ்கர லவ்பண்ண வச்சிட்டான்,
பாஸுக்கு பயங்கர சந்தோசம் டெய்லி அவ கூடவே பஸ்ல போயிட்டு கூடவே வருவான்,
அவளுக்கு நிறைய செலவு பண்ணினான்,ஆனா ஒன்னும் வேலைக்கே ஆகல
அதுவும் கொஞ்சகாலம்தான் நீடிச்சது அவளுக்கு மாப்ள பாக்க ஆரம்பிசிட்டாக ஆனா பாஸ்கர் தெளிவா முடிவுஎடுத்தான் கல்யாணம்லாம் இப்ப முடியாது மாப்ள அவ கல்யாணம் பண்ணனும்னா பண்ணிக்கட்டும் வருத்தம்தான் ஆனா familyஅ பாக்கணும்டானுடான், உடனே அலெக்ஸ்க்கு பயங்கர கோபம் வந்துட்டு ஏய் நீயே வந்து
முடியாதுன்னு சொன்னவள கம்பல் பண்ணி லவ் பண்ணிட்டு இப்ப கல்யாணம்னதும்
விட்டுட்டு ஓடரியே நீயெல்லாம் ஆம்பளையானான்,அதுக்கு என்ன மாப்ள பண்றது அவஎன்
familyக்கு setஆவ மாட்டாடா,அத நீ நாயி மாதிரிஅவ பின்னாடி போறப்ப யோசிச்சிருக்கணும்,அது சரி மாப்ள, உன்ன மாதிரிலாம் என்னால லாஜிக்லாம் பேச முடியாது
லவ் வேற கல்யாணம் வேற இதுல னான் தெளிவா இருக்கேன் என்ன விட்ருடா" இப்படி
ரெண்டு பேரும் பாக்குரப்பலாம் சண்ட போட்டுப்பானுக ,அதுக்கப்புறம் னான் சென்னை போய்ட்டேன் அடுத்த கொஞ்சநாள்ல மலேசியா வந்துட்டேன் இந்த நேரத்துல தான் அலெக்ஸ்க்கு கல்யாணம் நடந்தது
தொடரும் ....
நண்பர்களே! இந்த உலகத்துல நமக்குன்னு எந்த உயிரும் இல்லன்ற கணத்தில் தான் தற்கொலைகள் நடக்க ஆரம்பிக்குது,இவ்வளவு நெருக்கமா வாழ்ற நமக்குள்ளேயே இவ்வளவு அந்நியப்ட்டுப்போன மனிதர்களும் இருப்பதை நாமெல்லாம் உணரனும்
நாமசெய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு individuality இருகிறத நாமெல்லாம் உணரனும் பொதுவான மதிப்பீடுகளால் தனிமனிதனை மதிப்பிடும் பொதுபுத்தியிலிருந்து விடுபடவேண்டும். பக்கதுல இருக்குற
மனிதனின் ஆசைகள்,நிராசைகள காதுகொடுத்து கேட்டாலே அவனோட பாதி பிரச்னை குறைஞ்சிடும்,நம்மில் இன்னொரு அலெக்ஸ் உருவாகாம இருக்கும் போதுதான் நம் வாழ்வின் மதிப்பு உயரும் .

0 கருத்துகள்