வாழ்வின் வெம்மையிலிருந்து
விடுபட என் மனம்
கவிதையையே தாபிக்கிறது.
கவிதைகளுக்காக ஒன்றுமற்ற
மொட்டை வெளியில்
வார்த்தைகளை வேட்டையாடிக்
கொண்டிருக்கிறேன்.
என்னால் கடித்துக்குதறி
உமிழப்பட்ட வார்த்தைகளை
உங்களிடம் கவிதை என்கிறேன்
நீங்கள் அதை சிறிய குச்சியால்
கிளறி அதன் உள்நுட்பங்களை
பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கும் போது
உலகம் அழிகிறது .

0 கருத்துகள்